அரசாங்கம், மின்சாரத் துறையை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்திச் செலவுகளைக் குறைத்து அதனூடாக நுகர்வோர் மின் கட்டணங்களைக் குறைக்கும் வகையில் இந்த மறுசீரமைப்பு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மறுசீரமைப்பின் கீழ்,அரசாங்கம் தாமாக முன்வந்து, ஓய்வு பெற்ற மின்சார சபை ஊழியர்களுக்கு நிதி இழப்பீடு வழங்கிய நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
அந்த நிகழ்வில், தாமாக விரும்பி ஓய்வு பெற்ற 1,898 ஊழியர்கள் தங்களது நிதிப் பங்கீட்டைப் பெற்று கொண்டனர்.
இதன்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரித்தல்,நீர்மின் நிலையங்களை மேலும் திறம்படச் செயல்பட வைத்தல் ஆகிய இரு நடவடிக்கைகளும் தமது திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் இவை காலப்போக்கில் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க உதவும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ,இலங்கை மின்சார சபையை மேலும் திறன் வாய்ந்ததாக மாற்றுவதும், வாடிக்கையாளர்களுக்கான சேவையை மேம்படுத்துவதும் இதன் நோக்கம் என குறிப்பிட்டதோடு,குறிதத மறுசீரமைப்பு, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்தார்.








