மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் தற்போதைய மின் கட்டண சூத்திரத்தை திருத்துவதற்கான ஆய்வு தொடங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் நுகர்வோருக்கு உகந்த மின்சார கட்டண முறையை அறிமுகப்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கமாக உள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
புதிய வழிமுறை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மின்வலு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்.
திருத்தப்பட்ட சூத்திரம் பின்னர் புதிய பாராளுமன்றத்தால் நியமிக்கப்படும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என பேராசிரியர் ஹேமபால மேலும் குறிப்பிட்டுள்ளார்.







