தற்போதைய அரச நிர்வாகத்தின் கீழ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள யாழ் தேவி தொடருந்து சேவைகளை தமது அரசாங்கத்தின் கீழ் மீள ஆரம்பிப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

30 வருட கால போரை முடித்த பின்னர் வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து பாதைகளை ராஜபக்ச அரசாங்கம் வெற்றிகரமாக நிறுவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகம் மாத்தறை முதல் கதிர்காமம் வரையான 114 கிலோமீற்றர் நீளமான தொடருந்து பாதையை தாமதமின்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here