தொடர்ச்சியாக நடந்த முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூவரை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று (21) கஹதுடுவ பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையின் போது, அவர்கள் வாடகைக்கு போவதுபோன்று முச்சக்கர வண்டிகளில் பயணித்து, சாரதிகளின் முகத்தில் மிளகாய்த் தூள் வீசி வண்டிகளைத் திருடியதாகவும், கொள்ளை சம்பவங்களில் அவர்களில் ஒருவரின் மனைவியும் தொடர்புடையவராகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
கஹதுடுவ, கலவான மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளில் நடைபெற்ற இந்தக் கொள்ளைகளில் பயன்படுத்தப்பட்ட 4 முச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 24, 27 மற்றும் 29 வயதுடையவர்களாக இருக்கின்றனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







