பெல்லன்வில ஏரிக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் தாமரை பூ பறிக்க சென்று முதலை தாக்குதலுக்கு உள்ளாகி காணாமல் போனதாக  பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹொரணை கனன்வில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதுர ஜினேந்திர என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இந்த நபர் தாமரை பூ பறிப்பதற்காக பெல்லன்வில ஏரிக்கு அருகிலுள்ள வாய்க்கால் ஒன்றிற்குள் இறங்கியுள்ளார். அங்கு வைத்து அவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அன்றைய தினம் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று (29) மதியம் இந்த நபரின் சடலம் அங்கிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள வாய்க்காலில் மிதந்து கொண்டிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தின் தலைப்பகுதியிலும் மார்புப் பகுதியிலும் முதலை தாக்கியதற்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here