இமயமலை தொடரில் உள்ள ஒரு பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 626 ஆக அதிகரித்துள்ளதாக நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த திடீர் பேரிடருடன் குறைந்தது 1,924 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் வெளிநாட்டு மீட்பு குழுக்களின் உதவியை பெற்றுக்கொள்ளாமல் இருக்க எடுத்த முடிவை நேபாளம் மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை தாங்களே ஒருங்கிணைப்போம் என்றும், வெளிநாட்டு மீட்பு குழுக்களின் உதவி தேவையில்லை என்றும் நேபாள வெளியுறவு அமைச்சகம் முன்னதாக அறிவித்திருந்தது.

எனினும், வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் வெளிநாட்டவர்களும் இருப்பதால், சம்பந்தப்பட்ட நாடுகளிடமிருந்து வந்த இராஜதந்திர அழுத்தங்களுக்கு மத்தியில் அந்த முடிவை மாற்ற நேபாள அரசு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுரங்கப்பாதைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் சிக்கலான நடவடிக்கைகளுக்கும், சடலங்களை அடையாளம் காணும் தொழில்நுட்ப பணிகளுக்கும் சர்வதேச நிபுணர் குழுக்களுக்கு நேபாள அதிகாரிகள் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here