முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (15) கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகவலின்படி, கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விவசாயத் துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் செயல்முறையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் அந்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கச் சென்றபோது, விசாரணை அதிகாரிகள் அவரை அதே வழக்கில் கைது செய்தனர்.

முறைகேடு தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், மனுஷ நாணயக்கார தற்போது ஆணைக்குழுவின் காவலில் உள்ளார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here