விவசாயிகளுக்கான யூரியா உரத்தை நேரடி மற்றும் கலவையாக சந்தைக்கு விநியோகிப்பதற்காக, 15,000 மெட்ரிக்தொன் யூரியா உரத்தை அரச உரக் கம்பனி லிமிட்டெட் இற்கு வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயெ அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) இதனை தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் சர்வதேச போட்டி விலைமுறை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக மூன்று விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட உயர்மட்ட நிரந்தர பெறுகைக் குழு வழங்கிய விதிகளின் அடிப்படையில், இந்த 15,000;+/-5% 500 மெட்ரிக்தொன் விநியோக ஒப்பந்தத்தை சிங்கப்பூரின் M/s Valency International Pre. Ltd நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்களில் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரை விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த மொழியினை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.







