முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் வெளிநாடு செல்லும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றின் பின்னணியிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு பயணத்திற்கான இலக்காக பிரான்ஸ், இங்கிலாந்து, அல்லது இந்தியா ஆகிய நாடுகள் கருதப்பட்டுவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் சூழ்நிலைபடி, எதிர்க்கட்சிகள் சில, ரணில் விக்ரமசிங்கவிடம் எதிர்க்கட்சித் தலைமை பொறுப்பை ஏற்று, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த அழைப்புகளை கருத்தில் கொண்டு, அவர், ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தும் திட்டம் ஒன்றை முன்வைத்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. இருப்பினும், அவரது உடல்நிலை மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அவர் வெளிநாடு செல்லும் முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதற்கான திகதி தற்போது உறுதி செய்யப்படவில்லை, ஆனால் 2025ஆம் ஆண்டுக்குள், குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள், அவர் பயணம் மேற்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இதுவரை, இந்தத் தகவலுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தத் தரப்பிலிருந்தும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








