அநுராதபுர மற்றும் குருநாகல் மாவட்டங்களின் எல்லைப் பிரதேசங்களில் அதிகரித்து வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் பாதுகாப்பான குடிநீர் பற்றாக்குறை ஆகியவைக் கருத்தில் கொண்டு, எப்பாவெல, கிரிபாவ, இராஜாங்கனை மற்றும் நொச்சியாகம ஒருங்கிணைந்த நீர் விநியோகத் திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம், 09 பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள 134 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை ஆரம்ப கட்டமாக கொண்டிருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் 2026 முதல் 2029 வரையிலான காலப்பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த முதலாம் கட்டம், சுகாதார அபாயங்களை குறைக்கும் நோக்குடன், மறுசீரமைக்கப்பட்ட வடிவில் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை அனுமதி, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீர் விநியோகத் திட்டத்தின் மூலம், நாட்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வது முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here