ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டக் (Volker Türk) அவர்களுடன் நேற்றைய தினம் முக்கியமான இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பு, ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் அலுவலகத்தில் நடைபெற்றது.

சந்திப்பின் போது, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமை, அதில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தமது X (முந்தைய ட்விட்டர்) கணக்கில் வெளியிட்ட பதிவில்,

“இலங்கையின் மனித உரிமை பாதுகாப்பில் நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன்”
என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு, ஐ.நா. பொதுச் சபையின் 80வது கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள வேளையில், இலங்கையின் சர்வதேச உறவுகள் மற்றும் மனித உரிமை பங்குபற்றல் தொடர்பில் முக்கியமான பரிமாற்றமாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here