தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி சபாநாயகராக பணியாற்றிய அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் 102 ஆவது பிறந்த நாள் விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 20) அனுஷ்டிக்கப்பட்டது.

“உடுப்பிட்டி சிங்கம்” என புகழப்பட்ட அவரின் பிறந்த நாள் நிகழ்வு, கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

காலை, நெல்லியடி பஸ் நிலையம் அருகிலுள்ள திருவுருவச் சிலையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் கு. சுரேந்திரன், உப தவிசாளர் தி. தயாபரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, அமரரின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையிலும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

(யாழ் நிருபர்; கஜிந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here