மும்பையில் வீசிய கடுமையான புழுதிப் புயலின் போது விளம்பர பலகை இடிந்து விழுந்ததில் 14பேர் பலியானதோடு 60பேர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் காட்கோபரின் கிழக்குப் புறநகரில் சனநெரிசலான சாலைக்கு அடுத்ததாக அமைந்துள்ள விளம்பரபலகை இடிந்து விழுந்ததில் சில வீடுகள் மற்றும் பெற்றோல் பம்ப் சேதமாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








