முல்லைத்தீவு குருந்தி ரஜமஹா விகாரை வளாகத்தில் இருந்து அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்க புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி விகாராதிபதி பூஜ்ய கல்கமுவ சந்தபோதி தேரர் அமைச்சுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த  அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் சேனவி, விகாரைக்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பை விரைவில் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விகாராதிபதிபதிக்கு அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here