முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 வீதியின் 227ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த ‘ஹயஸ்’ (Hiace) வேன் வாகனம், வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்தது.

கொழும்பு நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம், அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டது.

வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்தார். அவர் தெய்வாதீனமாக சிறிய காயங்களுடன் தப்பியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here