நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம், 22 ஆம் மற்றும் 23 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஏலவே வழங்கப்பட்ட பரீட்சை நேர அட்டவணைக்கு ஏற்ப கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here