Saturday, April 18, 2026
No menu items!

உயர்தரப் பரீட்சை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -அரசின் புதிய தீர்மானம்!

உயர்தரப் பரீட்சையில் தகுதி பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள், இனி நாட்டின் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் உள்ள அனைத்து பீடங்களிலும் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முக்கியமான தீர்மானம் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன அவர்களால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு நான்கு பீடங்களில் மட்டுமே சேர வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த...

அநுராதபுரத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

அநுராதபுரம் தலாவை ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தலாவ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலாவப் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பாக மேலதிக...

தனியார் வகுப்புகளுக்கு தடை..!!

இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை முடியும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என்று பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையானது நவம்பர் மாதம்...

பாடசாலை நேர நீடிப்புக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு!

அடுத்த ஆண்டு (2026 ஜனவரி) முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் கல்வி அமைச்சின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சு உறுதிப்படுத்தியதையடுத்து, இதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சின் இந்த முடிவுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான Z புள்ளி இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 06 மணிக்கு பின்னர் குறித்த Z புள்ளி வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025 உயர்தரப் பரீட்சை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. பரீட்சைக்கு தோற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளவர்கள் மற்றும் முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்க முடியும். இதன்படி, இணையத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியானது!

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று (ஆகஸ்ட் 07) வெளியிடப்பட்டுள்ளன என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தங்களது பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி பெறுபேறுகளை இணையத்தளங்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk மூலமாக பார்வையிடலாம். இந்த பெறுபேறுகள், 2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு...

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி இதனை தெரிவித்தார். இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற...

பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழிப் பதிவு ஆரம்பம்..!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழிப் பதிவு இன்று (5/9/2025) www.ugc.ac.lk வழியாகத் தொடங்கி மே 30 ஆம் திகதி நள்ளிரவு வரை திறந்திருக்கும். இறுதி திகதிக்குப் பின்னர், விண்ணப்பதாரர்கள் விருப்பங்களைத் திருத்திக் கொள்ள இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும். இந்த ஆண்டு சுமார் 43,300 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற இரட்டையர்கள்..!

2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த இருவரும் தேசிய மட்டத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை பெற்றுள்ளனர். சி.ஜமுனானந்தா பிரணவன்(முதலாம் இடம்) மற்றும் சி.ஜமுனானந்தா சரவணன் (இரண்டாம் இடம்)...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img