புஸ்ஸல்லாவ, மெல்போர்ட் கால்வாயில் தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று மீது குளவிகள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த தொழிலாளர்களில் ஒருவரான மெல்போர்ட் கால்வாயில் வசிக்கும் 50 வயதுடைய ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏனைய நால்வரும் வைத்திய சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.








