யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஒரு தொகுதியாக அடங்கும் கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் 2024ம் ஆண்டு தேருநர் இடாப்பின் பிரகாரம் 100907 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.
மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட பழைய மாவட்ட செயலக வளாகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்கதிபருமான எஸ். முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.










