மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 ஆவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 80 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

கிங்ஸ்டவுணில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 16 .4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here