கொல்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சோதனையின் போது, ​​விசா விதிமுறைகளை மீறியமை மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகிக்கப்படும் 74 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.

இலங்கை பொலிஸ் மற்றும் கொல்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கொல்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உத்தரானந்த மாவத்தையில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 41 ஆண்கள் மற்றும் 33 பெண்கள் அடங்குவர் என்றும், இவர்கள் அனைவரும் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் என்றும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

விசா காலாவதியான பிறகும் அவர்கள் நாட்டில் தங்கியிருந்ததோடு மோசடியான நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் காவலில் எடுக்கப்பட்டனர்.

இது குறித்து கொல்பிட்டி பொலிஸ் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here