தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது.
ஆட்சி அமைக்க தமிழக வெற்றி கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தற்போது அதன் பலம் 112 ஆக உள்ளது.
ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் ஏனைய கட்சிகள் விஜய்யின் கட்சிக்கு இன்னும் ஆதரவு அளிக்கவில்லை.
முன்னதாக கட்சியின் தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்தார். அப்போது தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் வழங்கினார்.
ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தவெகவிற்கு இல்லாததன் காரணமாக அவருக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
இதற்கிடையே திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது.
அதிமுகவுக்கு தேவையான ஆதரவை வெளியில் இருந்து திமுக வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் தம்மை முலமைச்சராக நியமிக்குமாறும் அதன் பின்னர் தாம் பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் தலைவர் விஜய் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்க உள்ளதாகவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.








