பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்விட்டிகல மாவத்தை, கொஸ்வத்தை வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹென்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது, மோட்டார் சைக்கிள் செலுத்துநர் லொறிக்கடியில் சிக்கி படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரழந்துள்ளார்.

இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here