சர்வதேச எண்ணெய் விலைகள் இன்று புதன்கிழமையன்று சற்று குறைவடைந்துள்ளன. பிரென்ட் மசகு எண்ணெய் 0.68% சரிந்து ஒரு பெரலுக்கு 97.81டொலர்கள் ஆகவும், அமெரிக்க WTI மசகு எண்ணெய் 0.29% சரிந்து ஒரு பெரலுக்கு 89.04 டொலர்கள் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஈரானுடனான பேச்சுவார்த்தை முடிவடையும் வரையில் போர் நிறுத்தம் நீடிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த நிலையில் இந்த விலை குறைவு பதிவாகியுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்வதால், தற்போது எண்ணெய் விலைகள் சற்று சரிந்துள்ளன எவ்வாறாயினும் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதால் விலைகள் நிலையற்றதாக காணப்படுகின்றன.







