வனவிலங்கு பாதுகாப்பு மன்றத்தின் தகவலின் படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை 288 யானைகள் இலங்கையில் இறந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை யானைகள் இறப்பில் உலகளவில் முதலிடம் பெற்றுள்ளது.

முன்னைய சில ஆண்டுகளின் நிலவரத்தை பார்க்கும்போது, 2020 முதல் 2024 வரை 2,000க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன.

யானைகள் இவ்வாறு அதிக அளவில் உயிரிழப்பதற்கு முக்கிய காரணங்கள் வேட்டையாடுதல், தொடருந்து மோதல்கள் மற்றும் மனித-யானை மோதல்கள் ஆகியவை என கூறப்படுகிறது.

மேலும் சில யானைகள் தந்தங்களைப் பெற்று அதிக விலையில் விற்பனை செய்யும் நோக்கத்திற்காக கொல்லப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு மன்றம், யானைகளின் உயிர்காப்பு நடவடிக்கைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here