யாழ்ப்பாணம் பிரதான தபால் அலுவலகத்தில் உப முத்திரைப் பணியக கருமபீடமும் பனை அபிவிருத்தி சபையின் கற்பகம் விற்பனை நிலையமும் நேற்றையதினம் (10/04/2025) திறந்து வைக்கப்பட்டது.
உப முத்திரைப் பணியக கருமபீடத்தை பிரதி அஞ்சல் மா அதிபதி (செயற்பாடுகள்) எச்.எம்.பிறேமச்சந்திர ஹேரத்தும் கற்பகம் விற்பனை நிலையத்தை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் த.சகாதேவனும் திறந்து வைத்தனர்.

குறித்த நிகழ்வில் வடக்கு பிரதி அஞ்சல் மா அதிபதி மதுமதி வசந்தகுமார், முத்திரைப் பணியக பணிப்பாளர் லங்கா டி சில்வா, பனை அபிவிருத்தி சபை சந்தைப்படுத்தல் முகாமையாளர் பா.சுதாகரன், யாழ்ப்பாணம் பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அனுராதா பர்ணாந்து, யாழ்ப்பாணம் பிரதம தபாலதிபர் பி.சாந்தாகுமாரி, முத்திரை சேகரிப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள், முத்திரைப் பணியக உத்தியோகத்தர்கள், அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








