இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3ஆம் கட்டை, ஆனைக்கோட்டை பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here