நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக வெளிநாட்டு அலுவலகங்கள், தூதரகங்கள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதியிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது என தெரிவித்த அவர், நாட்டின் புலனாய்வுத் துறை, இராணுவம் மற்றும் காவல்துறையினரைப் பலப்படுத்தினால் இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியும் என நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here