போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் சிறு குற்றங்களை தடுக்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் புதிய அவசர சேவை தொடங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில், இச் சேவை இன்று சம்பிரதாயபூர்வமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
பொதுமக்கள், 021–222 2221 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பெடுத்து முறையிட்டால், பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பர் என அத்தியட்சகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் இச்சேவையைப் பயன்படுத்தி, பொதுஇடங்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு பெற முடியும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.







