முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவற்றை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதே ஹரின் பெர்னாண்டோவின் முக்கிய பொறுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சியினால் ஏற்பாடு செய்யப்படும் ஆயிரம் கூட்டங்களுக்கும் ஹரின் பெர்னாண்டோவே பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here