யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீற்றர் கோடா வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கோடா, கசிப்பு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சுன்னாகம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத செயல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் நடைபெற்று வருகிறன. விசாரணைகள் முடிந்தவுடன் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.








