யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று (25) ஆரம்பிக்கப்பட உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கவிருந்த அகழ்வு பணிகள் பிற்போடப்பட்ட நிலையில், அவை இன்று மீண்டும் ஆரம்பமாகின்றன.

இதற்கு முன்பு, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்ற அகழ்வில், முதல் கட்டமாக 9 நாட்களும், இரண்டாம் கட்டத்தில் 45 நாட்களும் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 41 நாட்கள் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அகழ்வு பணிகளின் போது, 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், 140 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here