யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.

இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒருவரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்ற என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here