யாழ்ப்பாணம் குறித்து அரசியல் மேடைகளில் மட்டுமே காணப்படும் பேராட்சிகள் மற்றும் வாய்வீச்சுகள், உண்மையான அபிவிருத்தியிலில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (26) பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார்.

“சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல,” என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “இந்த அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு அபிவிருத்தித் திட்டத்தையாவது செயற்படுத்தியிருக்கிறதா? மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஏதேனும் நடைமுறைப்படுத்தப்பட்டதா?” எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்கிடையே, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் அறிக்கையை வாசிக்க சபாநாயகர் அழைத்தபோது, எதிரணிப் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ, “கேள்விக்கு பதில் இல்லையா?” என குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த பிமல் ரத்நாயக்க, “சுஜீவ, உங்களையும் அந்த வாட்டுக்குத்தான் அனுப்பணும்” என்றுள்ளார்.

சுஜீவ, “எந்த வாட்டுக்கு?” எனக் கேட்டதற்கு, “பின்னர் சொல்றேன்” என்று பிமல் பதிலளித்தார்.

சபையில் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தின் போதே, ராமநாதன் அர்ச்சுனா மீண்டும் “கேள்விக்கு பதில் இல்லையா?” என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “பைத்தியங்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது,” என்றும் “சபையில் குழப்பம் ஏற்படுத்தும் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும்” என்றும் சபாநாயகரை கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here