இறக்குமதி செய்யப்படும் அனைத்து உரிமம் பெற்ற மருந்துகளுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அதன்படி, இத்தகைய மருந்துகளை ஏற்றுமதி செய்கின்ற நாடுகள், குறிப்பாக இந்தியாவைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த தீர்மானம் அமையும் என வணிகத் துறை விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
ட்ரம்பின் கூற்றுப்படி:
மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவுக்குள் உற்பத்தி நிலையங்களை நிறுவ வேண்டும்,தற்போது கட்டுமானத்தில் இருக்கும் உற்பத்தி நிலையங்களுக்கு வரி விலக்கு வழங்கப்படும்,சமையலறை மற்றும் குளியலறை பொருட்களுக்கு 50% வரி,
தளபாடங்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.
இந்த தீர்மானம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கையாக அவர் “ட்ரூத்” சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எனினும், இந்த வரி உயர்வுகள் அமெரிக்க மக்களுக்கு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி, பணவீக்கத்தையும், பொருளாதார சுமையையும் ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.








