எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்சவிடம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பசில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here