ரணில் விக்கிரமசிங்கவை விட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பல முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், இல்லாவிடின் ரணிலின் கைதினை அரசியல் பழிவாங்கலாகவே நாம் பார்க்கிறோம் என எம்.பி ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பாலையடிவட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தான் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பயங்கரவார தடுப்பு சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்ததாகவும் , அரசியல் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் இருப்பதன் காரணமாக வட கிழக்கு மக்களின் , தேசிய இனப்பிரச்சினை , அபிவிருத்திகள் , மற்றும் யானைப்பிரச்சினை , உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையாள்வதில் சவால்கள் இருக்கின்றன எனவும் , அதற்காகவே நாம் சபை அதிகாரத்தினை கோரி நிற்கிறோம் எனவும் அமைச்சர் விஜித்த ஹேரத் கருத்து தெரிவித்தார்.

மேலும் அரசாங்கம் கூறுகிறது அடுத்த வருடம் முதல் ஆறு மாதங்களில் மாகாண சபை தேர்தல் நடாத்தப்படும் என தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 30 ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் , இதனை அகிம்சை ரீதியாக அனுஷ்டிப்பதற்கு தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என எம்.பி ஞா. ஸ்ரீநேசன் கருத்து தெரிவித்தார்.

(மட்டக்களப்பு நிருபர்- சோபிதன்)

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here