முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நாளை (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நீர்சத்து குறைபாடு காரணமாக ஏற்பட்ட அசௌகரியத்தால் விக்ரமசிங்க தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனிக்கப்பட்டு வருகிறார்.

அவரை பார்வையிட வரும் அரசியல் தலைவர்களின் வருகைகளை மட்டுப்படுத்துமாறு மருத்துவமனை பிரதி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்க முழுமையாக குணமடையவில்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here