Saturday, April 18, 2026
No menu items!

குற்றப் புலனாய்வு திணைக்களம்

ரணில் விக்ரமசிங்க வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நாளை (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த 22ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

சற்று முன்னர் கைதானார் ரணில் விக்ரமசிங்க..!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை வரலாற்றில்  ஜனாதிபதியாக பதவி வகித்த  ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே...

C.I.D யில் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இணைய ஊடுருவல் மூலம் 5 இலட்சம் ரூபா திருடிய பல்கலைகழக மாணவன் கைது!

இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் நேற்று வியாழக்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட பல்கலைகழக மாணவன் வவுனியா - புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த...

CID யில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கொள்ளை- இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது!

நபரொருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி 8.5 மில்லியன் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட...

செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர நாட்டை விட்டு தப்பியோட்டமா? – பொலிஸாரின் தகவல்!

கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என்பவரை சுட்டுக் கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் இஷாரா செவ்வந்தி மற்றும் 2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த அமில சம்பத் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “ரொட்டும்ப அமில” என்று அழைக்கப்படும் அமில சம்பத் என்பவர் ரஷ்யாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “ரொட்டும்ப அமில”  கைது செய்யப்பட்டதை ரஷ்ய பொலிஸார் உறுதி செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக CIDயினை நாடிய வர்த்தகர்!

மன்னார் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை  அபகரிப்பு செய்வதாக  கடந்த புதன்கிழமை (26/03/2025) செய்தியாளர் சந்திப்பினை வைத்து மன்னார் பேசாலையினை சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்ற பெண் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எதிராக சேக் முஹம்மத் ரிசான் சேக் அமானி என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தமது சட்டத்தரணி அயிஸ் மன்த கயான் சகிதம் நேற்று (27/03/2025) மாலை குற்றப்புலனாய்வுத்...

போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த நபர் கைது!

போதைப் பொருள் கடத்தல்காரரான புகுடுகண்ணா எனப்படும் புஷ்பராஜாவின் சகோதரர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவிலிருந்து போலி கடவுச்சீட்டில் இலங்கைக்கு வந்த குற்றச்சாட்டிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது .  
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img