முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட உத்தரவுக் கடிதம் தொடர்பில், பாதுகாப்புப் பிரிவினருக்கு விசேட உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

மேலதிக அறிக்கையொன்றை அனுப்பி வைத்த பொலிஸார், இந்தக் கடிதம் மாத்தறை தபால் நிலையத்திலிருந்தும், ஜனாதிபதி செயலகத்துக்கும் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபரும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், இந்தக் கடிதம் போலியான கடிதமா என விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here