ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் அன்பளிப்பு பொதிகள் யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 82 முஸ்லீம் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 7500 பெறுமதியான உலர் உணவு மற்றும் அன்பளிப்பு பொருட்கள் யாழ் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் இந்திய துணை தூதுவர் சாய் முரளி தூதரக அதிகாரி சங்கரன் இராஜகோபாலன், வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன், முஸ்லிம் மதத்தலைவர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here