கிரிபத்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுப்பிட்டி ரயில் கடவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) காலை ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here