ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் உள்ள வீட்டிற்கு இன்று (29) லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஒன்று சென்றுள்ளது.
ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் முன்னிலையாகாத காரணத்தினால் இவ்வாறு அதிகாரிகள் குழு வீட்டிற்கு சென்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








