இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜாவை முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் பாராட்டியுள்ளார்.
உலகின் நம்பர்.1 பல்துறை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு ஓட்டங்களை குவித்தார். இந்த தொடரில் 516 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்களை குவித்தவர்களின் பட்டியலில் ஜடேஜா நான்காமிடம் பிடித்தார்.
5 போட்டிகளில் விளையாடிய அவர் 516 ஓட்டங்களை பெற்றார் அதில் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். இந்த தொடரில் அவர் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.








