ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய வளர்ச்சியை குறிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.

குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்றன.

எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டது.

உக்ரைன் போருக்காக ஆயுதங்களை வழங்கி அதற்கு மாற்றீடாக வட கொரியா, பொருளாதார மற்றும் இராணுவ நன்மைகளைப் பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here