இலங்கை மத்திய வங்கி(CBSL) , வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
செப்டம்பர் 25, 2024 தேதியிட்ட வர்த்தமானியின்படி,
ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதியம் கொடுப்பது 11.09.2024 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தமானி மேலும் கூறுகிறது.
“முன்னாள் கவர்னர் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை அல்லது நடவடிக்கைகள் நடத்தப்பட்டால், அத்தகைய விசாரணைகள் அல்லது நடவடிக்கைகள் முடியும் வரை, அத்தகைய முன்னாள் ஆளுநருக்கு ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும் அல்லது இடைநிறுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் விதிகளின்படி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.








