இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலின் புதிய கட்டமாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் ஏற்கும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில், பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன் மூலம் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள், அபராதம், வழக்கு கட்டணம், முத்திரை வரி, சான்றளிக்கப்பட்ட நகல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை வங்கி அட்டைகள் மற்றும் இணையவழி முறையில் செலுத்த முடியும்.
நீதித்துறை அமைப்பில் பணம் செலுத்துவதை தானியங்கி மயமாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம், எதிர்காலத்தில் நீதவான் நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்றம் வரை விரிவுபடுத்தப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








