வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன எச்சரித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பல இடங்களில் டெங்கு நுளம்புக்கான குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் நுளம்புக் குடம்பிகள் விரைவாக பெருகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவல் திடீரென உயரும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்கள் தற்போது மிக அதிக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் மருத்துவர் சமன் பத்திரன குறிப்பிட்டார்.
இதனையடுத்து, வாரத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது தமது வீட்டு மற்றும் சுற்றுச் சூழலைத் துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.








