Saturday, June 13, 2026
No menu items!

டெங்கு காய்ச்சல்

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்பு அதிகரிப்பு அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் டெங்கு நுளம்புகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன எச்சரித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, மாகாண ரீதியில் பூச்சியியல் நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பல இடங்களில் டெங்கு நுளம்புக்கான குடம்பிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது நிலவும் மழையுடனான வானிலையால்...

மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்களுக்கு டெங்கு காய்ச்சல்..!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மூன்று மருத்துவர்கள் உட்பட 147 பணியாளர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயமாக இரத்தினபுரி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகையில் ​​ம ருத்துவ சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் உயிரிழப்புகள் எதுவும்...

டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழப்பு..!

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேர் உயிரிழந்ததோடு, 14,678 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில், அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் அதிகரித்து வருவதனால் இவ்வார இறுதியில் பிராந்திய...

அதிகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் வசிப்பவர்கள், நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு வழிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய மணிலாவில் உள்ள ஒரு கிராமம் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளது. உயிருடன் அல்லது இறந்த ஐந்து கொசுக்களை உள்ளே கொண்டு வருபவர்களுக்கு ஒரு பைசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிலா குடியிருப்பாளர்களின் கொசு கட்டுப்பாட்டு முயற்சிகளில் இது...

அதிகரித்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டிலுள்ள 17 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்  டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி கொழும்பு, கம்பஹா, கண்டி, மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே பெரும்பாலானவர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய, ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 5591 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் நாட்டின் 74 வைத்தியசாலைகளில் 342 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இன்று முதல் மூன்று நாள் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்!

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இன்று முதல் மூன்று நாள் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இந்த...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img