கடவத்தை – கணேமுல்ல வீதியில் உள்ள வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவர் இன்று சனிக்கிழமை (15/02/2025) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14/02/2025) இரவு 8.00 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், அதன்போது இந்த நபர் வனப்பகுதிக்கு வந்துள்ளதால் தீக்கிரையாகி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here